அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள பயணிகள் தரிப்பிடத்தின் அவல நிலை-இரவில் யாசகர்களின் உறைவிடமாக மாறிய நிலை.-Photo


மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள பயணிகள் தரிப்பிடம் இரவில் யாசகர்களின் உறைவிடமாக மாறியுள்ளதாகவும் இதனால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

மன்னார் அரச பேரூந்து தரிப்பிடம் மன்னார் நர சபையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற போதும் காலை 07 மணிமுதல் மாலை 5 மணிவரை  இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை அதிகாரிகளினால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.

தற்போது எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவது இல்லை.இந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு பின் மன்னாரில் உள்ள யாசகர்கள் தமது உறவிடமாக குறித்த பயணிகள் தரிப்பிடத்தை மாற்றியுள்ளனர்.

இரவு 7.30 மணிக்கு பயணிகள் தரிப்பிடத்திற்கு வரும் சுமார் 10 வரையிலான யாசகர்கள் அவ்விடத்தில் ஒன்று கூடி மதுபானம் அருந்துவதோடு புகையிலை பாவனைகளில் ஈடுபடுகின்றனர்.

இதன் போது அவர்களுக்கிடையில் ஏற்படுகின்ற தர்க்கத்தினால் அவர்கள் தமக்குள் சண்டை பிடிப்பதோடு பயணத்திற்காக காத்திருக்கும் ஆண்கள்,பெண்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளினால் பேசுகின்றனர்.

அது மட்டுமின்றி தரிப்பிடத்தினுள் வைத்து தாம் கொண்டு வந்துள்ள உண்வுகளை உண்டு விட்டு மீதியை தரிப்பிடத்தினுள்லேயே கொட்டுகின்றனர்.

இதனால் தரிப்பிடத்தில் பயணிகள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு கொட்டப்பட்ட உணவை சாப்பிடுவதற்காக தரிப்பிடத்தைச் சுற்றி தெரு நாய்களும் ஒன்று கூடுகின்றது.இதனால் தொடர்ச்சியாக பயணிகள் பல்வேறு அசெகரியங்களுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருகினறனர்.அதிகாலையில் குறித்த யாசகர்கள் பயணிகள் தரிப்பிடத்திற்கு முன்பே சிறு நீர் கழிப்பதினால் அவ்விடத்தில் பாரிய துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்விடையத்தில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை முகாமையாளரும்,மன்னார் நகர சபையும் உரிய நடவடிக்கை எடுத்து குறித்த யாசகர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,,

இவ்விடயம் தொடர்பில் மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.இச் சம்பவத்தை நான் நேரில் சென்று பார்த்து உறுதிப்படுத்தியுள்ளேன்.மன்னார் பொலிஸாரின் உதவியை பெற்று உடனடியாக குறித்த யாசகர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்.என தெரிவித்தார்.










மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள பயணிகள் தரிப்பிடத்தின் அவல நிலை-இரவில் யாசகர்களின் உறைவிடமாக மாறிய நிலை.-Photo Reviewed by NEWMANNAR on September 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.