அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி, முழுங்காவில் பகுதியில் விபத்தில் பாடசாலை மாணவன் பலி

கிளிநொச்சி, முழுங்காவில் பகுதியில் கன்ரர் ரக வாகனம் புதன்கிழமை (03) மதியம் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக முழங்காவில் பொலிஸார் தெரிவித்தனர்.

 முழங்காவில், சோலைநிலா குடியிருப்பைச் சேர்ந்த சு.தமிழ்மாறன் (வயது 07) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். பஸ்ஸில் இருந்து இறங்கி, மாணவன் அந்த பஸ்ஸுற்கு முன்னால் சென்ற வேளை, பஸ்ஸை முந்திக்கொண்டு சென்ற கன்ரர் ரக வாகனம் மாணவனை மோதியுள்ளது. 

 இதில் படுகாயமடைந்த மாணவன், முழங்காவில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார். மாணவனது சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

கன்ரர் ரக வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி மாணவன் முழங்காவில் ஆரம்ப மகா வித்தியாலயத்தில் தரம் 2இல் கல்வி கற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி, முழுங்காவில் பகுதியில் விபத்தில் பாடசாலை மாணவன் பலி Reviewed by NEWMANNAR on September 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.