மன்னாரில் 148 ஆவது பொலிஸ் தினம் அனுஸ்ரிப்பு-Photo
இலங்கை பொலிஸ், இன்று புதன் கிழமை (03) தனது 148ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகின்றது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் 148 ஆவது பொலிஸ் தினம் அனுஸ்ரிக்கப்பட்டது.
மன்னார் பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றது. இதன் போது மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சரத் குமார ஜோசப்,உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.பி.ரி.சுகதபால ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது உயிர் நீத்த பொலிஸாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு சர்வமத தலைவர்களின் சர்வமத பிரார்த்தனைகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 148 ஆவது பொலிஸ் தினம் அனுஸ்ரிப்பு-Photo
Reviewed by NEWMANNAR
on
September 03, 2014
Rating:

No comments:
Post a Comment