மன்னார் மக்களின் 30 கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவான நபர் -அதிர்ச்சித் தகவல் அம்பலம்.படங்கள் இணைப்பு
மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் வசித்துவரும் பிரபல வர்த்தகர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டு குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளமை குறித்து கடந்த யூலை மாதம் செய்திகள் வெளியாகியிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
மன்னார்- தாழ்வுபாடு பிரதான வீதியில் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றை(சலூன்)நடத்தி வந்த அந்தோனிப்பிள்ளை கருணாகரன்(வயது-37) என்பவரே இவ்வாறு தலைமறைவாகியுள்ளார்.
இவரால் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ச்சியாக மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.
குறித்த நபர் இரும்பு வாணிபம் (ஹாட்வெயார்) ஒன்றையும் நடத்தி வந்ததோடு சீட்டு பிடிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.மக்களிடம் பணத்ததை வாங்கி அதிக வட்டியும் வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் இவரை நம்பி அதிகளவான வர்த்தகர்கள்,அரச தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இவரிடம் சீட்டு போட்டிருந்ததோடு இவரை நம்பி கோடி கணக்கான ரூபாக்களை வட்டிக்கும் கொடுத்துள்ளனர்.
பலர் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்..
மக்களுக்கு வழங்க வேண்டிய வட்டி,சீட்டுப்பணம்,கடன் காசு ஆகியவற்றை மிகவும் நம்பிக்கையான முறையில் வழங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் கடந்த யூலை மாதம் 20 ஆம் திகதி முதல் குடும்பத்துடன் தலைமறைவான நிலையில் மக்களுக்கு இவர் மேல் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இவரது வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.இவரை தேடிய மக்கள் கடைசியில் மன்னார் பொலிஸ் நிலையத்தில முறைப்பாட்டையும் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
குறித்த நபர் சுமார் 30 கோடி ரூபாய் பணத்துடன் தலைமறைவாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்களின் தகவல்களின் படி தெரிய வருகின்றது.
இவரை நம்பி பணம் வழங்கிய பலர் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த நபரால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் தலைமறைவான அந்தோனிப்பிள்ளை கருணாகரன்(வயது-37) என்பவரது புகைப்படம் மற்றும் அவர் தொடர்பான விடையங்களை துண்டுப்பிரசுரம் மூலம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் மக்களின் 30 கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவான நபர் -அதிர்ச்சித் தகவல் அம்பலம்.படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
September 04, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 04, 2014
Rating:





No comments:
Post a Comment