அண்மைய செய்திகள்

recent
-

உலக எழுத்தறிவு தினம் இன்று

உலக எழுத்தறிவு தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய நிகழ்வு களுஅக்கலயில் நடைபெறவுள்ளது. பாடசாலை செல்ல வேண்டிய வயதில் பாடசாலை செல்லாத பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் ஆளுமையை விருத்தி செய்வதே இம்முறை சர்வதேச எழுத்தறிவு தின தேசிய நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். 

 இதேவேளை, இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு 40 வீதம் வரை அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டளவில் இதனை 75 வீதம் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார் நாட்டின் ஒருசில கிராமிய பகுதிகளில் எழுத்தறிவு மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 கல்வி வளங்கள் முறையான அனைத்துப் பகுதிகளுக்கும் பகிரப்படாமையே இதற்கான முக்கிய காரணம் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் இந்த நிலைமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எழுத்தறிவு வீதம் குறைவாக காணப்படுகின்ற பகுதிகளை இலக்காக கொண்டு கல்வி வலய மட்டத்தில் பல்வேறு செயற்றிட்டங்களை அரசாங்கமும் மாகாண சபைகளும் முன்னெடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உலக எழுத்தறிவு தினம் இன்று Reviewed by NEWMANNAR on September 08, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.