மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 40 மீனவர்கள் கைது
தலைமன்னார் மற்றும் ஊர்காவற்றுறை கடற்பரப்புக்களில் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்த 40 மீனவர்களை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
ஊர்காவற்றுறை கடற்பரப்பில் 12 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
அத்தோடு தலைமன்னார் கடற்பரப்பில் ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 40 மீனவர்களும் கடற்படையினரால் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 40 மீனவர்கள் கைது
Reviewed by NEWMANNAR
on
September 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 08, 2014
Rating:

No comments:
Post a Comment