பெருமளவிலான மக்களின் காணிகளை படையினர் கைப்பற்றியுள்ளனர் ; பேராயர் இராயப்பு ஜோசப்
பெருமளவிலான மக்களின் காணிகளை படையினர் கைப்பற்றியுள்ளனர் என மன்னார் மறைமாவட்ட பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அண்மையில் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனை சந்தித்த போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு பேராயர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இராணுவத்தினர் காணிகளை கைப்பற்றியுள்ளதனால் பெரும் எண்ணிக்கையிலான மன்னார் மாவட்ட மக்கள் காணிகளின்றி வாழ்வதாகத் தெரிவித்துள்ளார்.
வேறும் நோக்கங்களுக்காக காணிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்
4000 ஏக்கர் காடு அழிக்கப்பட்டு 1000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வீடு உள்ளவர்களுக்கே வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வீட்டுத் திட்டத்திலும் வீடுகள் உள்ளவர்களே வீடுகளை பெற்றுக்கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் ஆசிரியர்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு நிலவி வருவதாக மன்னார் பேராயர் தெரிவித்துள்ளார்.
பெருமளவிலான மக்களின் காணிகளை படையினர் கைப்பற்றியுள்ளனர் ; பேராயர் இராயப்பு ஜோசப்
Reviewed by NEWMANNAR
on
October 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 06, 2014
Rating:


No comments:
Post a Comment