அண்மைய செய்திகள்

recent
-

அரசாங்க சேவையிலிருந்து இளைப்பாறியோரின் அனுபவம் மற்றும் திறமைகளை சமூகத்துக்கு பயனுள்ளதாக்கும் வகையில் விசேட வேலைத் திட்டம்

அரசாங்க சேவையிலிருந்து இளைப்பாறியோரின் அனுபவம் மற்றும் திறமைகளை சமூகத்துக்கு பயனுள்ளதாக்கும் வகையில் அவர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கிலும் ஓய்வூதியம் பெறுவோரு க்கான விசேட வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

தனியார் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் அனுபவமும் திறமையும் நிறைந்த இளைப்பாறியோருக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய எதிர்வரும் ஜனவரி முதல் அரசாங்க நிறுவனங்களிடமிருந்து ஓய்வூதியம் பெறுவோரின் அனுபவம், திறமை பற்றிய விவரங்களை சேகரித்து அவற்றை குறித்த நபரின் புகைப்படத்துடன் இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் சர்வதேச ரீதியாக இவர்கள் பல்வேறு செயற்திட்டங்களுக்கு உள்வாங்கப் படுவரெனவும் அவர் விளக்கமளித்தார்.

இதன் மூலம் ஓய்வூதியம் பெற்றோர் சமூகத்திலிருந்து தள்ளிவைக்கப்படாமல் சமூகத்திற்கு மீண்டும் பயனுள்ளவர்களாக்கப் படுகின்றனர். அத்துடன் ஓய்வூதியக் கொடுப்பனவு மேலதிகமாக அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் ஒரு உபாயமாக இது அமையுமெனவும் பணிப்பாளர் நாயகம் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை ஓய்வூதியக்காரர்கள் தமது ஓய்வூதியப் பணத்தை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிரமங்களையும் அவர்களது உயிரிழப்புக்குப் பின்னர் கணவன், மனைவி அல்லது பிள்ளைகள் அதனைப் பெற்றுக் கொள்வதில் உள்ள காலதாமதத்தை தவிர்க்கும் வகையிலும் இளைப்பாறியோருக்கு டிஜிட்டல் முறையிலான அடையாள அட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த அட்டையில் ஓய்வூதியம் பெறுவோரின் தற்போதை விபரம் மற்றும் எதிர்காலத்தில் ஓய்வூதியம் செல்ல வேண்டிய விபரம் மற்றும் ரயில், பஸ் வண்டிகளின் கட்டணங்களில் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் என்பன அதில் உள்ளடக்கப்பட்டிருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஓய்வூதியக் கொடுப்பனவு பற்றிய தகவல்கள், வங்கி மிகுதி ஆகியவற்றை வீட்டிலிருந்தபடியே அறிந்து கொள்ளும் வகையில் எவ்வித முற்கொடுப்பனவுமின்றி நவீன தொழில்நுட்ப கருவிகளை பெற்றுக் கொடுக்க திணைக்களம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து திட்டங்களை வகுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

பிரதேச செயலகங்களில் பணியாற்றி வரும் ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு பொறுப்பான அதிகாரிகளின் அசட்டையீனம் மற்றும் தொழில் மீதான ஈடுபாடின்மையே அநேகமான காலதாமதங்களுக்கு காரணமாகின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் 328 பிரதேச செயலகங்களுடனும் வலையமைப்பை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம்.

இதன்மூலம் அரசாங்க அதிகாரிகள் தொடர்ந்து 24 மணித்தியாலங்களும் தமது செயற்பாடுகள் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். உடனுக்குடன் நேரடியாக அவர்களை தொடர்பு கொள்வதற்கான வசதிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோமெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இலங்கையில் தற்போது 5 இலட்சத்து 43 ஆயிரத்து 552 பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்களுக்காக மாதாந்தம் 10 பில்லியன் ரூபா நிதி ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. சுமார் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் விதவைகளும் தபுதாரர்களும் ஓய்வூதியத்தைப் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரம் பேர் ஓய்வூதியத்தில் புதிதாக உள்வாங்கப்படுகின்றனர்.

ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளும் சுமார் 6,800 பேர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களுள் 4 ஆயிரம் பேருக்கு வங்கிகளுக்கூடாகவும் 2,800 பேருக்கு தூதரகம் மற்றும் கொன்சியுலர் அலுவலகங்களுக்கூடாகவும் ஓய்வூதியப் பணம் அனுப்பி வைக்கப்படுகிறதெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

சுமார் 200 பேர் வரையில் தமக்கு ஓய்வூதியப் பணம் வேண்டாமெனக் கூறி அவற்றை மாதாந்தம் அநாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை திணைக் களத்திற்கூடாக மேற்கொண்டிருப் பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க சேவையிலிருந்து இளைப்பாறியோரின் அனுபவம் மற்றும் திறமைகளை சமூகத்துக்கு பயனுள்ளதாக்கும் வகையில் விசேட வேலைத் திட்டம் Reviewed by NEWMANNAR on October 07, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.