நாளை சந்திரகிரகணம்
பௌர்ணமி தினமான நாளை 8ஆம் திகதி (வப் போயா) பூரண சந்திரகிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவை காணக்கூடியதாக இருக்கும் என்று ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் முழுமையாக காணக் கிடைக்காது என்றும் சந்திரகிரகணத்தின் இறுதிக் கட்டத்தை மாத்திரம் காணமுடியுமென்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.
இலங்கை நேரப்படி பிற்பகல் 1.46 முதல் 7.04வரை சந்திரகிரகணம் தென்படும் என்றும் அந்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
வடக்கு மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் அவுஸ்திரேலியா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலும் இந்த சந்திரகிரகணத்தை முழுமையாக காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திரக்கிரணகம் காரணமாக, பௌர்ணமி தினத்தன்று இரவு சிவந்த நிலவைக் காணலாம் என்றும் இதற்கு ரெட் மூன் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சந்திரகிரகணம்
Reviewed by NEWMANNAR
on
October 07, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 07, 2014
Rating:


No comments:
Post a Comment