வீட்டு கழிவு நீரை வீட்டிற்கு வெளியே வெளியேற்றுவதினால் மக்கள் பாதிப்பு.-Photo
மன்னார் வங்காலை 4 ஆம் வட்டாரப்பகுதியில் நபர் ஒருவர் தமது வீட்டில் உள்ள கழிவு நீரை வீட்டிற்கு வெளியே வெளியேற்றுவதினால் அப்பகுதி மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் நபர் தமது குளியலறை ,மலசல கூட கழிவு நீர் மற்றும் வீட்டில் உள்ள கழிவு நீர் ஆகியவற்றை வீட்டின் மதில் பகுதியூடாக வீட்டிற்கு வெளியே வெளியெற்றுகின்றனர்.
குறித்த கழிவு நீர் வீட்டிற்கு வெளியில் தேங்கி நிற்பதோடு அப்பகுதியில் உள்ள வீதியிலும் தேங்கி நிங்கின்றது.
இதே வேளை குறித்த வீதியை தோண்டி கழிவு நீரை வெளியேற்றுகின்றனர்.இதனால் மக்கள் அவ்வீதியூடாக பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு இரவு நேரத்தில் அவ்வீதியூடாக பயணிப்போர் வெட்டப்பட்ட பள்ளத்தில் தடுக்கி விழுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கழிவு நீர் பாரிய துர்நாற்றம் வீசுவதினால் அப்பகுதி மக்கள் சுகாதார பிரச்சினைகளுக்கும் உள்ளாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரச்சினை தொடர்பாக நானாட்டான் பிரதேச சபைக்கு பல தடவை தெரியப்படுத்தியும் நானட்டான் பிரதேச சபை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காது அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வீட்டு கழிவு நீரை வீட்டிற்கு வெளியே வெளியேற்றுவதினால் மக்கள் பாதிப்பு.-Photo
Reviewed by NEWMANNAR
on
October 05, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 05, 2014
Rating:






No comments:
Post a Comment