சர்வதேச ஆசிரியர் தினம் -அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்.
“ஆசியர்களுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடு – எதிர்காலத்துக்கான முதலீடாகும்” என்பதே இம்முறை ஆசிரியர் தின தொனிப்பொருளாகும்.
யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஆசிரியர் தினம் 1994 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6 ஆம் திகதி முதற்தடவையாக இலங்கையில் கொண்டாடப்பட்டது.
சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி கல்வி துறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மதத் தரப்பு உள்ளிட்ட 820 பேர் இன்றைய தினம் கௌரவிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் ஆசிரியர்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிவருவதாக ஆசிரிய தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
நீண்டகாலமாக சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படாமை ஆசிரியர் சேவை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகின்றார்.
இதேவேளை, பல வருடங்களாக தடைப்பட்டுள்ளது அதிபர் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகளை டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 2,17,000 ஆசிரியர்களை இலக்காகக் கொண்டு நடமாடும் சேவையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் கல்வி அமைச்சரும், அரசாங்கமும் பதவி உயர்வுகளை வழங்குவதாக தெரிவித்து அதிபர் மற்றும் ஆசிரியர்களை மீண்டும் ஏமாற்ற முனைவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச ஆசிரியர் தினம் -அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
Reviewed by NEWMANNAR
on
October 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 06, 2014
Rating:


No comments:
Post a Comment