இஸ்லாத்தின் முன்மாதிரிகளை ஏனைய சகோதர சமூகத்தினர் அங்கீகரிக்கும் வகையில் எமது கலாச்சார,பண்பாடுகள் அமைய வேண்டும்- வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.
மனித குலத்தின் ஒற்றுமைக்கும்,தியாகத்திற்கும் முன்மாதிரியாக திகழ்ந்து இஸ்லாத்தின் விட்டுக் கொடுப்புக்களை உலகமறிய செய்த நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் வரலாற்றுப்பாடங்களை நாம் பார்க்க வேண்டிய இன்றைய நன்நாளில் தியாகம் என்னும் அதி உயர் விட்டுக் கொடுப்புடன் செயற்பட பிரார்த்தனைகளை செய்யுமாறு வட மாகாண சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வெளியிட்டுள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள பெருநாள் செய்தியில்,,,,
இலங்கையில் மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் பெருநாள் தினத்தை இஸ்லாமியர்கள் கொண்டாடும் இந்த வேளை,இஸ்லாத்தின் முன்மாதிரிகளை ஏனைய சகோதர சமூகத்தினர் அங்கீகரிக்கும் வகையில் எமது கலாச்சார,பண்பாடுகள் அமைய வேண்டும்.இன்றைய காலகட்டமானது பல்வேறு விமர்சனங்களையும்,புரிந்துணர்வற்ற சூழ்நிலையினையும் சுமந்துள்ள வேளையில் முஸ்லிம்களாகிய எம்மில்,ஈகைத் திருநாள் கற்றுத் தந்துள்ள பாடத்தை சரியான முறையில் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக வடக்கில் வாழும் சமூகங்களின் ஒற்றுமைக்காகவும்,இந்த நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பு என்பனவற்றுக்காகவும் ஒவ்வொருவரும் பிரார்த்தனை புரிவது இன்றியமையாதது என தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,இன்றைய பெருநாள் தினத்தில் ஏனைய சமூகங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து,பொறுமைகாத்து செயற்படும் எண்ணத்தை ஏற்படுத்தி கொள்ளுமாறும் தனது பெருநாள் வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாத்தின் முன்மாதிரிகளை ஏனைய சகோதர சமூகத்தினர் அங்கீகரிக்கும் வகையில் எமது கலாச்சார,பண்பாடுகள் அமைய வேண்டும்- வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.
Reviewed by NEWMANNAR
on
October 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 06, 2014
Rating:


No comments:
Post a Comment