அண்மைய செய்திகள்

recent
-

தேர்தல் காலங்களில் பாப்பரசர் இலங்கைக்கு வர மாட்டார்; சிரில் காமினி பெர்ணான்டோ

2015 ஜனவரி 13 ஆம் 14 ஆம் திகதிகளில் தேர்தல் பிரசாரங்கள் இடம்பெறக் கூடிய வகையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டால் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கை விஜயத்தை மேற்கொள்ள மாட்டாரென பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பான பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

பாப்பரசர் ஜனவரி 13ஆம் 14 ஆம் திகதிகளில் இலங்கை விஜயம் குறித்து தீர்மானிக்கப்பட்டது ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேசப்படுவதற்கு முன்னர் என்றும் அருட்தந்தை சிரில் காமிணி பெர்ணான்டோ தெரிவித்தார். அரசாங்கம் இதுவரை ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது பொதுத் தேர்தலையோ அறிவிக்கவில்லை மற்றும் தேர்தல் நடைபெறும் தினமோ அறிவிக்கப்படவில்லை. 

எனவே பாப்பரசர் விஜயத்தில் இன்று வரை மாற்றம் ஏற்படப் போவதில்லை. தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளும் கால கட்டத்தில் பாப்பரசர் இலங்கை விஜயம் மேற்கொள்ளமாட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் காலங்களில் பாப்பரசர் இலங்கைக்கு வர மாட்டார்; சிரில் காமினி பெர்ணான்டோ Reviewed by NEWMANNAR on October 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.