ஒன்பது மாதங்களில் 1,500 பேஸ்புக் கணக்குகள் முடக்கம்
இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் சுமார் 1,500 போலி பேஸ்புக் கணக்குகளை (fake profile) முடக்கியுள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவிக்கின்றது.
போலி கணக்குகள் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் பேஸ்புக் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படுவதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளதார்.
இதற்கமைய அந்த நிறுவனத்தினால் போலி பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இணையத்தளங்கள் தொடர்பாக இந்த வருடம் 1,800 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதில் அநேகமானவை போலி பேஸ்புக் கணக்குகளுடன் தொடர்புபட்டு காணப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் கூறியுள்ளார்.
போலி பேஸ்புக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தொடர்பில் 0112 691 692 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது மாதங்களில் 1,500 பேஸ்புக் கணக்குகள் முடக்கம்
Reviewed by NEWMANNAR
on
October 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 06, 2014
Rating:


No comments:
Post a Comment