அண்மைய செய்திகள்

recent
-

முன்னாள் புலி உறுப்பினர் நகுலேஸ்வரனின் கொலை தொடர்பில் வெள்ளாங்குளம் கிராம அலுவலகர் உட்பட 06 பேர் கைது-பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண.

மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் வசித்து வந்த முன்னாள்  புலி உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் என்பவர் தனது வீட்டில் வைத்து கடந்த புதன் கிழமை இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த கொலை சம்பவம் தொடர்பில் வெள்ளாங்குளம் கிராம சேவகர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிராம சேவகர் உட்பட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் தடயவியல் ரீதியாக முக்கிய தடயங்களும்,சாட்சியங்களும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இக்கொலைக்கான காரணம் என்னவென்று எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. 

விசாரணை  முடிந்த நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் நாங்கள் வெளிவிடுவோம் என்றார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண.

இக்கொலை தொடர்பில் முக்கிய அரச அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரிடம் கேட்டதற்கு,,,

இன்னும் பிரதேச செயலாளர் கைது செய்யயப்படவில்லை.பல விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

சாட்சியங்களின் ஊடாக இச்சம்பவத்தில் எவர் சம்பந்தப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களுடைய பதவி நிலை பாராது அவர்களை கைது செய்வோம்.என்றார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண அவர்கள்.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட  வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த தமிழீழ காவல் துறையின் முன்னாள் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன்(வயது-40) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே கடந்த  புதன் கிழமை (12) இரவு 8.30 மணியளவில் அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

 இவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்டு வந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் புலி உறுப்பினர் நகுலேஸ்வரனின் கொலை தொடர்பில் வெள்ளாங்குளம் கிராம அலுவலகர் உட்பட 06 பேர் கைது-பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண. Reviewed by Admin on November 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.