அண்மைய செய்திகள்

recent
-

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட மாணவிகளின் புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியானமை தொடர்பில் விசாரணை


ஹொரவ்பொத்தானை கப்புகொல்லாவ பகுதியில் ஆசிரியர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட ஆறு மாணவிகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கெபித்திகொல்லாவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பான வழக்கு கெபித்திகொல்லாவ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஹொரவ்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட ஆறு மாணவிகளினதும் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியருக்கு பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் கடும் ஆட்சேபனை வெளியிட்டுள்ளது.

இதற்கமை குறித்த ஆசிரியர் இம்மாதம் 25 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட மாணவிகளின் புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியானமை தொடர்பில் விசாரணை Reviewed by NEWMANNAR on November 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.