சட்ட விரோதமாக உணவு விற்பனையில் ஈடுபட்ட 35 வர்த்தகர்கள் கைது
சட்ட விரோதமாக உணவு விற்பனையில் ஈடுபட்ட 35 வர்த்தகர்கள் நீர்கொழும்பு. ஜா-எல மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது இவர்கள் கைது செய்யப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
காலாவதியான உணவுப் பொருட்களை விற்றமை, கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, விலைப் பட்டியலை காட்சி படுத்தாமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் குறித்த 35 வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சட்ட விரோதமாக உணவு விற்பனையில் ஈடுபட்ட 35 வர்த்தகர்கள் கைது
Reviewed by NEWMANNAR
on
November 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 08, 2014
Rating:


No comments:
Post a Comment