குளங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்காக வவுனியா மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல்
தற்போது ஏற்பட்டுள்ள காலநிலையில் குளங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்காக வவுனியா மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல் நேற்று வவுனியாவில் இடம் பெற்றது.
அனர்த்த முகாமைத்துவ நிலையமும் விவசாய திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக் கலந்துரையாடலில் பாதிப்புக்குள்ளாகியுள்ள குளங்களை புனரமைப்பு செய்வதனூடாக அனர்த்தங்களை எவ்வாறான வழிமுறைகளில் தடுக்க முடியும் என்பது தொடர்பில் விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை அணைக்கட்டுகளின் தற்போதைய தன்மைகள் குறித்தும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் விவசாயிகளிடம் இருந்து எழுத்து மூலமாக பெறப்பட்டிருந்ததுடன் அவற்றை சீர் செய்வது தொடர்பிலும் அனர்த்த முகாமைத்துவநிலையத்தின் வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் ரி. சூரியராஜாவினால் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.
குளங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்காக வவுனியா மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல்
Reviewed by NEWMANNAR
on
November 21, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 21, 2014
Rating:

No comments:
Post a Comment