அண்மைய செய்திகள்

recent
-

பாலமோட்டை காட்டுப் பகுதியிலிருந்து காட்டு மரங்களை கடத்திய இருவர் கைது

12 இலட்சம் ரூபாய் பெறுமதியான காட்டுமரங்களை அனுமதிப்பத்திரமின்றி கடத்திச் சென்ற இருவரை, வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் வைத்து வியாழக்கிழமை (20) அதிகாலை கைது செய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

பாலமோட்டை காட்டுப் பகுதியிலிருந்து வவுனியா நகரத்துக்கு காட்டுமரங்களை கடத்திச் செல்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், மரங்களைக் கடத்துவதற்குப் பயன்பட்ட வாகனமும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

வவுனியா, பாலமோட்டை, நவ்வி ஆகிய பகுதிகளிலுள்ள காட்டுமரங்களை கடத்தும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாகவும், அதற்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.
பாலமோட்டை காட்டுப் பகுதியிலிருந்து காட்டு மரங்களை கடத்திய இருவர் கைது Reviewed by NEWMANNAR on November 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.