கொஸ்லாந்தை மீரியபெத்தயில் பத்தாவது நாளாக மீட்புப் பணிகள் முன்னெடுப்பு
கொஸ்லாந்தை, மீரியபெத்தயில் ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகளை இன்றும் முன்னெடுக்கவுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவிக்கின்றது.
இன்றைய மீட்புப் பணிகளின்போது மீரியபெத்த கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா குறிப்பிடுகின்றார்.
மீட்புப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், மண்ணில் புதையுண்ட எவரினதும் உடல்கள் மீட்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
சீரான வானிலை நிலவியமையால் மீட்புப் பணிகளை நேற்றைய தினம் வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்ததாக மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி சுட்டிக்காட்டினார்.
கொஸ்லாந்தை மீரியபெத்தயில் பத்தாவது நாளாக மீட்புப் பணிகள் முன்னெடுப்பு
Reviewed by NEWMANNAR
on
November 07, 2014
Rating:

No comments:
Post a Comment