அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எருக்கலம்பிட்டி 'தர்கா நகர்' கிராம மக்கள் தம்மை இயற்கை அனார்த்தத்தில் இருந்து பாதுகாக்குமாறு கோரிக்கை.- Photo


மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள எருக்கலம் பிட்டி 'தர்கா நகர்' கிராமத்தினுள் கடல் நீர் உற்செல்லுவதினால் அக்கிராம மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக எருக்கலம்பிட்டி தர்கா நகர் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் முஹமட் சுகைப் தெரிவித்தார்.

எருக்கலம் பிட்டி தர்கா நகர் கிராமத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 65 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் 15 குடும்பங்கள் கடற்கரை ஓரத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரச காணியில் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த 15 வீடுகளுக்கும் பின்புறமாக சுமார் 200 மீற்றர் துராம் கொண்ட தடுப்புச் சுவரை அமைக்க அரச அதிகாரிகளினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த தடுப்புச் சுவர் அமைக்கும் பணியும் இடம் பெற்றது.

200 மீற்றர் நீளம் கொண்ட தடுப்புச்சுவர் அமைப்பதற்கு பதிலாக சுமார் 20 மீற்றர் தடுப்புச் சுவர் மாத்திரமே அமைக்கப்பட்ட நிலையில் குறித்த பணி கை விடப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக அக்கிராம மக்கள் மன்னார் பிரதேச சபை,மன்னார் மாவட்டச் செயலகம்,மன்னார் பிரதேச செயலகம்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியவற்றிற்கு பல தடவை எழுத்து மூலம் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கைகளும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை.

உரிய அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் நடந்து கொள்ளுவதாக அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.குறித்த வீடுகள் தற்போது கடல் நீரில் மிதக்கின்ற வகையில் காணப்படுகின்றது.

இக்கிராமத்திற்கு இந்திய வீட்டுத்திட்டம் கிடைத்துள்ள போதும் 4 வீடுகள் அமைக்க மாத்திரமே நிதி வழங்கப்பட்டுள்ளது.தெரிவு செய்யப்பட்ட ஏனைய 35 குடும்பங்களுக்கும் இது வரை வீடு அமைப்பதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை.

கடற்கரையோரமாக வழங்கப்பட்டுள்ள காணியில் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் மின்சார சபையின் தெரு மின் கம்பங்கள் மக்களின் வீட்டு வளவினுல் காணப்படுகின்றது. இதனால் இக்கிராம மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அரசியல் வாதிகளும்,அரச திணைக்கள அதிகாரிகளும் அசமந்த போக்குடனும்,சுயநலத்துடனும் செயற்பட்டு வருவதாக அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே உரிய அதிகாரிகள் எருக்கலம்பிட்டி தர்கா நகர் கிராம மக்களின் நலனில் கவனம் செலுத்தி இடை நடுவே கைவிடப்பட்ட கடல் நீர் கிராமத்தினுள் உற் செல்லாத வகையில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரை முழுமையாக அமைத்து இக்கிராம மக்களை இயற்கை அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அக்கிராம மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட திடீர் அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த தடுப்புச் சுவர் அமைப்பதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.











மன்னார் எருக்கலம்பிட்டி 'தர்கா நகர்' கிராம மக்கள் தம்மை இயற்கை அனார்த்தத்தில் இருந்து பாதுகாக்குமாறு கோரிக்கை.- Photo Reviewed by NEWMANNAR on November 07, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.