கொலை மிரட்டல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்!- ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல்
கொலை மிரட்டல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஊழல் மோசடிகளை தடுத்தல் மற்றும் நல்லாட்சி ஆகியவனவற்றை வலியுறுத்தும் அமைப்பாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
இந்த அமைப்பின் பணியாளர்கள் திட்டங்கள், திட்டங்களில் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுவதுடன் நிகழ்ச்சிகளை நடத்த விடாமல் தடுக்கப்படுவதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.ருஹுகே தெரிவித்துள்ளார்.
இந்த கொலை மிரட்டல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிடம், ருஹுகே எழுத்து மூலம் கோரியுள்ளார்.
அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் நிறுவனத்தின் சான் விஜேதுங்கவினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஏனைய முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரையில் விசாரணை நடத்தப்படவில்லை.
கிரித்தலே டியர் பார்க், நீர்கொழும்பு கோல்டன் சேன்ஸ் மற்றும் கொழும்பு கலதாரி ஹோட்டல் ஆகியவற்றில் புலனாய்வு செய்தி சேகரிப்பு தொடர்பில் நடத்தப்படவிருந்த ஊடக கருத்தரங்குகளை நடத்தவிடாது தடுக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டனர்.
ஏற்கனவே இது குறித்து முறைப்பாடு செய்துள்ளோம்.
மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
கடந்த ஜூன் மாதம் 27ம் திகதி கொழும்பு க்ளோபல் டவர் ஹோட்டலில் நடத்தப்படவிருந்த வருடாந்த பொதுக் கூட்டத்திற்கும் தடை ஏற்படுத்தப்பட்டது.
கடந்த ஒக்ரோபர் மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடத்தப்படவிருந்த தகல்களை அறிந்து கொள்ளும் உரிமை குறித்த கருத்தரங்கையும் நடத்த வேண்டாம் என மோட்டார் சைக்கிளில் வந்த தரப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனால் இந்தக் கருத்தரங்கும் நடத்தப்படவில்லை என ருஹுகே தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அவர், பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளார்.
கொலை மிரட்டல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்!- ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல்
Reviewed by NEWMANNAR
on
November 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 08, 2014
Rating:


No comments:
Post a Comment