சீகிரிய ஓவியத்திற்கு வர்ணம் தீட்டிய மாணவி கைது
சீகிரிய ஓவியங்களில் வர்ணப் பேனையால் வரைந்த கல்முனை பகுதி பாடசாலை ஒன்றின் மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்வி சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று பிற்பகல் மாணவி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
குறித்த மாணவியின் நடவடிக்கைகளை அவதானித்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், அவரைக் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 17 வயதான மாணவி தம்புளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
எனினும், இந்த மாணவியை விடுவிக்குமாறு கோரி சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த கல்முனை பகுதி பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் பொலிஸ் நிலையத்திற்கு முன்னாள் காத்திருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் சீகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சீகிரிய ஓவியத்திற்கு வர்ணம் தீட்டிய மாணவி கைது
Reviewed by NEWMANNAR
on
November 07, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 07, 2014
Rating:


No comments:
Post a Comment