அண்மைய செய்திகள்

recent
-

சாரதிகள் தண்டப்பணத்தை செலுத்த புதிய முறை

வாகன சாரதிகள் தனக்கான தண்டப்பணத்தை பிரதேச தபால் அலுவலகத்தின் ஊடாகவோ அல்லது தொலைபேசியினூடாகவோ செலுத்தும் முறைமை இவ்வருட டிசம்பர் மாதத்திற்குள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.


அத்தோடு 2015 ஆம் ஆண்டளவில் வங்கி கடனட்டையினூடாக தண்டப்பணம் செலுத்தும் முறைமையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் இன்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் வாகன சாரதிகள் தவறு செய்தால் தண்டப்பணம் அறவிடும் முறைமை இலங்கையில் 35 வருட காலமாக சம்பிரதாயபூர்வமாக செயற்பட்டு வருகிறது.

இதற்கமைய 2012 ஆம் ஆண்டு தொலைபேசி குறுத்தகவல் ஊடாக தண்டப்பணம் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி மொரட்டுவை ஆதர் சி கிளார்க் ஆய்வு கூட்டத்தில் இது குறித்த ஒழுங்கு முறையை கோரினோம்.

மேற்படியே இம்முறையே அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சம்பிரதாய முறைமையின் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமம் கொள்கின்றனர்.

குறித்த சிரமங்களை கருத்திற்கொண்டு சாரதி தனக்கு விதிக்கப்பட்ட தண்ட பணத்தை விரும்பின் பிரதேச தபால் நிலையத்திலோ அல்லது தொலைபேசியினூடாகவோ செலுத்த முடியும்.

குறித்த முறைமைக்கான விலை மனு கோரல் அடுத்த கிழமை பெறப்படவுள்ளது. இம்முறைமை டிசம்பர் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை 2015 ஆம் ஆண்டு வங்கி கடனட்டை மூலம் தண்டப்பணம் செலுத்தும் முறைமையை அறிமுகப்படுத்த பொலிஸ் திட்டமிட்டுள்ளது.
சாரதிகள் தண்டப்பணத்தை செலுத்த புதிய முறை Reviewed by NEWMANNAR on November 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.