உரமின்றி கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு
மிக நீண்டதொரு வறட்சியின் பின்னர் வயல்களை நம்பி விதைத்த கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் விதைத்த பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில், மானிய உரம் வழங்கப்படாத நிலையில் விளைச்சல் தொடர்பில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற மானிய உரம் விதைத்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் வழங்கப்படவில்லை. அரசாங்கம் வழங்கும் எனும் எதிர்பார்ப்பால் தனியார் விவசாய வியாபார நிலையங்களும் உரத்தை கொள்வனவு செய்யாத காரணத்தால் விவசாயிகள் உரத்திற்கு ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மூன்று மாதப்பயிர்கள் விதைத்து மூன்று மாதமாகி விட்டது. இனி உரத்தை போட்டென்ன விட்டென்ன என சலிக்கும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் காணப்படுகின்றனர்.
இது கிளிநொச்சி இருக்கின்ற அரச பாராளுமன்ற உறுப்பினரும் அவர் சார்ந்த கட்சி உறுப்பினர்களினதும் திட்டமிட்ட செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. அவரது முகவர்கள் அவருக்கு தற்போது கிராமங்களுக்குள் உரம் தேவையென உற்பத்திக்குழுக்களை கடிதம் எழுத வேண்டுமென வற்புறுத்தி வருவதாகவும் இதன் மூலம் விவசாயிகளின் வியர்வையோடு அரசியல் விளையாட்டில் அரச பாராளுமன்ற உறுப்பினர் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது.

Reviewed by NEWMANNAR
on
December 12, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment