உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் 22 ஆம் திகதி விநியோகிக்கப்படும்: தபால் திணைக்களம்
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி தபால் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தபால் திணைக்களம் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் என அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேரத்ன கூறியுள்ளார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை என்ற போதிலும் அன்றைய தினமும் விசேட தபால் விநியோக தினமாக கருதி வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் 22 ஆம் திகதி விநியோகிக்கப்படும்: தபால் திணைக்களம்
Reviewed by NEWMANNAR
on
December 13, 2014
Rating:

No comments:
Post a Comment