அண்மைய செய்திகள்

recent
-

”மன அழுத்தம் வாழப் பிடிக்கவில்லை”; கடிதம் எழுதி வைத்துவிட்டு 8 வயது சிறுமி தற்கொலை

”மன அழுத்தம் காரணமாக வாழப் பிடிக்கவில்லை” என கடிதம் எழுதி வைத்து விட்டு 8 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு, யெலஹங்கா பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் நேற்று தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சிறுமி தன் கைப்பட எழுதிய கடைசிக் கடிதத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர். மன அழுத்தம் காரணமாகவே இந்த தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக அக்கடிதத்தில் சிறுமி குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் மன அழுத்தத்திற்கு அவரது பாடசாலை காரணமாக அமைந்துள்ளதா? என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேபோல், சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

கடந்த 22ஆம் திகதி முதல் சிறுமி பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

பத்து வயதிற்கும் குறைந்த சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொள்வது பெங்களூருவில் இதுவே முதன்முறை என பொலிஸார் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

”மன அழுத்தம் வாழப் பிடிக்கவில்லை”; கடிதம் எழுதி வைத்துவிட்டு 8 வயது சிறுமி தற்கொலை Reviewed by NEWMANNAR on December 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.