300 மூடை சீனியுடன் பாரவூர்தியை காணவில்லை
கொழும்பிலிருந்து 300 சீனி மூடைகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்துகொண்டிருந்த பாரவூர்தியொன்றை கடந்த 30ஆம் திகதி முதல் காணவில்லையென சீனி மூடைகளின் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை (02) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதியை சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் இணைந்து பாரவூர்தியொன்றில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சீனி மூடைகளை எடுத்து வந்துள்ளனர்.
பாரவூர்தியின் சாரதியும், உதவியாளரும் புத்தளம் வரை தொடர்பில் இருந்ததாகவும் அதன் பின்னர் அவர்களுடனான தொடர்பு அற்றுப்போனதாகவும் உரிமையாளர்கள் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
300 மூடை சீனியுடன் பாரவூர்தியை காணவில்லை
Reviewed by NEWMANNAR
on
December 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 03, 2014
Rating:


No comments:
Post a Comment