வடமாகாண இளைஞர் பிரதிநிதிகளால் வடமாகாண முதலமைச்சரிடம் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட மகஜர் கையளிப்பு-Photos
இன்று டிசம்பர் 10ம் நாளில் மனித உரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.இத் தினத்தில் வடமாகாண இளைஞர் பிரதி நிதிகளினால் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட மகஜர் முதலைமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.இந் நிகழ்வு யாழ்,வீரசிங்கம் மண்டபத்தில் சுமார் 1700க்கும் அதிகமான இளைஞ,யுவதிகள் பங்கு கொள்ள நடைபெற்றது.
நிகழ்வில் 'சுதந்திர பயண பிரகடனம்' எனும் தலைப்பின் கீழ் பல கோரிக்கைகளை முன் வைத்தே மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது.இம் மகஜரில்
1.மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும்.
2.இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு.
3.காணிப் பிரச்சனைகள்.
4.மீள் குடியேற்றத்தின் பின்னரான வீடமைப்பு திட்டம்.
5.காணாமல் போனோர் மற்றும் ஆட்கடத்தல்.
6.புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் மீதான அவதானம்.
7.ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூக அமைப்புகளுக்குமான தொடர்பு சுதந்திரம்.
8.இராணுவ தலையீடுகள்.
9.அரசியல் உரிமைகளை உறுதி செய்தல்,
10.இனங்களுக்கிடையில் பரஸ்பர உறவை கட்டியெழுப்புதல்.
11.வடமாகாண சபைக்கான அதிகாரம்.
12கலை,கலாச்சாரம்..
போன்ற பிரகடனங்கள் விளக்கமாக முன்வைக்கப்பட்டிருந்தன.
இந் நிகழ்வுக்கு வடமாகாண ஆளுனரை அழைத்திருந்த போதும் அவர் வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மன்னாரிலிருந்து இன் நிகழ்விற்க்காக சென்றிருந்த இளைஞர்கள் பூநகரியில் ஒரு மணி நேரம் படையினரால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் செல்வதற்கு அனுமதித்திருந்தனர் .
வடமாகாண இளைஞர் பிரதிநிதிகளால் வடமாகாண முதலமைச்சரிடம் பல கோரிக்கைகள் முன்
வைக்கப்பட்ட மகஜர் கையளிப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
December 10, 2014
Rating:
No comments:
Post a Comment