அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரின் மூன்று பாடசாலைகளுக்கு முன்பாக பயணிகள் தரிப்பிடம் அமைக்கும் பணி ஆரம்பம்.-Photos



மன்னாரின் மூன்று பாடசாலைகளுக்கு முன்பாக பேரூந்துத் தரிப்பிடம் அமைக்கும் பணியினை வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் நேற்று வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி, புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை, புனித சவேரியார் பெண்கள் கல்லூரி ஆகிய மூன்று பாடசாலைகளுக்கும் முன்பாகவே குறித்த பயணிகள் தரிப்பிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சு  மேற்கொண்டு வந்த நிலையில் ஆரம்ப நிகழ்வு நேற்று இடம் பெற்றது.

குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வடக்கு மாகாண  மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் மதத்தலைவர்கள்,மன்னார் நகர முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம், பிரதி நகர முதல்வர் ஜேம்ஸ் ஜேசுதாசன், நகர சபை உறுப்பினர்கள் இ.குமரேஸ்,என்.நகுசீன் ,எஸ்.பிருந்தாவனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் எம்.ஜிப்ரி, மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.துரம் உற்பட பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வேலைத்திட்டம் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.





மன்னாரின் மூன்று பாடசாலைகளுக்கு முன்பாக பயணிகள் தரிப்பிடம் அமைக்கும் பணி ஆரம்பம்.-Photos Reviewed by NEWMANNAR on December 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.