ஜனாதிபதி தேர்தலுக்கு அடையாள அட்டைகளை பெற 15ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள்ää இம்மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆiணாயளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
எனவே தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பம் செய்ய முடியும் என தேசிய ஆட்பதிவு திணைக்களம் அறிவித்திருந்தது.
தேர்தலுக்கு தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள விரும்புவோர் கால நேரத்திற்கு அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் சரத் குமார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு அடையாள அட்டைகளை பெற 15ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்
Reviewed by NEWMANNAR
on
December 11, 2014
Rating:

No comments:
Post a Comment