சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு டிசெம்பர் 28ஆம் திகதி ஆரம்பம்
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
இரண்டு கட்டங்களாக இந்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்தார்.
சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல்கட்ட பணிகள் நாடு முழுவதிலும் உள்ள 83 பாடசாலைகளில் இம்மாதம் 28 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகின்றார்.
இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகளை ஜனவரி 20 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை 13 பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டு பணிகளில் 32 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறுகின்றார்.
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ள தலைமை பரிசோதகர்களுக்கான செயலமர்வொன்று எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார மேலும் குறிப்பிட்டார்.
சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு டிசெம்பர் 28ஆம் திகதி ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
December 19, 2014
Rating:

No comments:
Post a Comment