பரிசுத்த பாப்பரசரின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் உட்பட அருட்தந்தையர்கள் அடங்கிய குழு மடுத்திருத்தலத்திற்கு திடீர் விஜயம்.-Photos
பரிசுத்த பாப்பரசரின் விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று வியாழக்கிழமை (4) காலை மன்னார் மடு திருத்தலத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்தனர்.
குறித்த குழுவில் பாப்பரசரின் வழிபாடுகளுக்கான அருட்தந்தையர்கள் மற்றும் பாப்பரசரின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளே வருகை தந்திருந்தனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கு வரும் பரிசுத்த பாப்பரசர் 14 ஆம் திகதி மாலை மடு திருத்தலத்திற்கு வருகை தந்து விசேட திருப்பலி ஆராதனையை நிறைவேற்றவுள்ளார்.
மடுத்திருத்தலத்தில் மடு மாதா திருச்சொரூப ஆசீர்வாதத்தை மேற்கொள்ளும் பரிசுத்த பாப்பரசர் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் விசேட ஆசிர் வழங்கவுள்ளார்.
இந்த நிலையில் பரிசுத்த பாப்பரசரின் மன்னார் மடு திருத்தலத்தின் வருகையை முன்னிட்டு மடு திருத்தலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள்,பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய்வதற்காக பரிசுத்த பாப்பரசரின் விசேட குழுவினர் இன்று(4) வியாழக்கிழமை காலை மன்னார் மடு திருத்தலத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இக்குழுவில் பாப்பரசரின் வழிபாடுகளுக்கான அருட்தந்தையர்கள் மற்றும் பாப்பரசரின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.
வருகை தந்த அவர்கள் மடுத்திருத்தலத்தை சுற்றி பார்வையிட்டிருந்ததோடு மேற்கொள்ளப்படவுள்ள திருப்பலி மற்றும் ஏனைய ஏற்பாடுகள் குறித்து மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை,மடு திருத்தள பரிபாலகள் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை ஆகியோருடன் விரிவாக கலந்துரையாடினர்.
இதனைத் தொடர்ந்து பாப்பரசரின் மடு விஜயம் தொடர்பில் மடு திருத்தலத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிழல் தொடர்பில் விரிவாக அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தப்பட்டது.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
பரிசுத்த பாப்பரசரின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் உட்பட அருட்தந்தையர்கள் அடங்கிய குழு மடுத்திருத்தலத்திற்கு திடீர் விஜயம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
December 04, 2014
Rating:

No comments:
Post a Comment