அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொலிஸ் நிலைய பிரதான வீதியில் விபத்து 4 பேர் காயம்-Photos


மன்னார் பொலிஸ் நிலைய பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(25-01-2015) மாலை 3.50 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் நான்கு(4) பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலைய வீதி டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டியும்,மோட்டார் சைக்கில் ஒன்றுமே மோதியதினால் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் வீதி போக்கு வரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிலில் மூன்று பேர் மது போதையில் அதி வேகமாக பயணித்த போது நேர் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதிய போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியை நிறுத்த முற்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முச்சக்கர வண்டி பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளகியுள்ளதாக தெரிய வருகின்றது.

இதன் போது முச்சக்கர வண்டி சாரதிக்கு பலத்த காயம் ஏற்பட்டதோடு முச்சக்கர வண்டியும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

-இதே வேளை மது போதையில் மோட்டார் சைக்கிலில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளனர்.மோட்டார் சைக்கிலில் இருந்து ஒரு தொகை டின் பியர் வீதியல் வீழ்ந்து கிடந்துள்ளது.

-சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸார் வருகை தந்ததோடு காயமடைந்த நான்கு பேரை மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

-எனினும் மோட்டார் சைக்கிலில் பயணித்து காயமடைந்த 3 பேர் மாத்திரமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட போதும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படவில்லை என மன்னார் வைத்திய சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த மோட்டார் சைக்கிலில் பயணித்த மூன்று பேரும் மது போதையில் உள்ளதாகவும் அவர்களில் ஒருவருக்கு கால் எலும்பு முறிவடைந்துள்ளதாகவும்,ஏனைய இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த விபத்து மன்னார் பொலிஸ் நிலைய பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் இடம் பெற்றுள்ளது.

மது போதையில் அதி வேகமாக வருகை தந்தமையினாலேயே விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


































மன்னார் பொலிஸ் நிலைய பிரதான வீதியில் விபத்து 4 பேர் காயம்-Photos Reviewed by NEWMANNAR on January 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.