அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற 'பாரதி விழா' நிகழ்வு.- Photos


மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்திருந்த 'பாரதி விழா' நிகழ்வு நேற்று(25) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் அம்மன்றத்தின் தலைவர் பிரம்மசிறி மஹா தர்மகுமார சர்மா குருக்கல் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தமிழ்மணி கலாநிதி அகலங்கன்,சிறப்பு விருந்தினரர்களாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,விசேட விருந்தினராக மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் உற்பட கொளர விருந்தினர்களாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.பரமதாஸ்,மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான்,சட்டத்தரணி எம்.சபூர்தீன் உற்பட கலைஞர்கள்,ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கலை நிகழ்வுகள்,பட்டிமன்றம் ஆகியவை இடம் பெற்றது.குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு பொன்னடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது 'ஊடகம் துறை சார்' விருது மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் ஏ.ரீ.மார்க் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

குறித்த விருதை மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் மற்றும் எழுத்தாளர் சாகித்திய விருது பெற்ற எஸ்.ஏ.உதயன் ஆகியோர் இணைந்து வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.



மேலும் முழுமையான படங்களுக்கு 
http://photos.newmannar.com/2015/01/Barathy-vizha-2015.html












மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற 'பாரதி விழா' நிகழ்வு.- Photos Reviewed by NEWMANNAR on January 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.