ஒன்பது மாகாண ஆளுநர்களும் இராஜினாமா
ஒன்பது மாகாணங்களினதும் ஆளுநர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஆளுநர்களின் இராஜினாமா கடிதங்கள் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அபேகோன் கூறியுள்ளார்.
இதற்கமைய ஒன்பது மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
வட மாகாணத்தின் புதிய ஆளுநராக இலங்கையின் முக்கிய இராஜதந்திரியும், வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளருமான எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்கார ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் எஞ்சிய எட்டு மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் அடுத்த வாரத்திற்குள் நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்
ஒன்பது மாகாண ஆளுநர்களும் இராஜினாமா
Reviewed by NEWMANNAR
on
January 21, 2015
Rating:

No comments:
Post a Comment