மாவீரர்களையும்,போராட்டத்தையும் பணையமாக வைத்து எவரும் சுயநலம் பேண கடைசி வரை நாம் அனுமதிக்க மாட்டோம்-முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் அணி.-Photos
மாவீரர்களையும்,போராட்டத்தையும் பணையமாக வைத்து எவரும் சுயநலம் பேண கடைசி வரை நாம் அனுமதிக்க மாட்டோம்.
இன்றைய அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் சென்று சர்வதேச அரசியல் நீரோட்டத்தில் ஒத்திசைந்து சென்று எமது தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பது தான் சிறந்த வழி என இலங்கை தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் அணி தெரிவித்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்படுகையில்,,,
எமது இலங்கை தமிழரசுக்கட்சியானது மிகவும் தொன்மை வய்ந்தது என்பதோடு சிறந்த நிர்வாக கட்டமைப்புக்களுடனும்,சிறந்த பண்புகளுடனும் உயரிய சிந்தனைகளுடனும்,எமது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகவும்,ஒருங்கிணைந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பும் ஒற்றுமையாக மக்களின் விடுதலைப்பயணத்தில் இன்றைய சர்வதேச அரசியல் நீரோட்டத்திற்கு ஏற்ற வகையில் மிகவும் நுணுக்கமாகவும்,உன்னிப்பாகவும்,நேர்மையாகவும் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து செயற்பட்டு வருகின்றது.
இந்த வகையில் இன்றைய சூழலில் அவதானத்துடன் எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும்,முடிவுகளுக்கும் நாங்கள் பாரட்டுக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல நாட்கள் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு எமது ஆதரவை வழங்குவது என்ற தீர்மானத்தில் பலதரப்பட்ட நெருக்குவாதங்கள் ஏற்பட்ட சூழ்நிலையிலும் பலதரப்பட்டவர்களை அழைத்து பல கோணங்களில் ஆராய்ந்து ஒவ்வொரு கட்சியினுடைய தீர்மானங்களை பெற்று மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி உரிய காலப்பகுதியில் முக்கியமான கால கட்டத்தில் இப்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு அறிவித்தமையினை இட்டு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
இந்த நிலையில் எமது கட்சியில் இருக்கும் ஒரு சிலர் அற்ப சொற்ப சுக போகங்களை அனுபவிப்பதற்கும்,சலுகைகளுக்கும் துணை போவதாக எம் மாவட்ட இளைஞர் அணியினரும்,மக்களும் கருதுகின்றனர்.
எம மக்களினுடைய நீண்டகால தீர்க்கப்படாத பிரச்சினைகளை உலகறிய வைத்தது விடுதலை போராட்டமே.
இதை எவராலும் மறுக்கவோ,மறைக்கவோ,தடுக்கவோ முடியாது.எமது தலைவரும்,மாவீரர்களும் என்றும் எம் மனங்களில் குடியிருக்கின்றனர்.இதை எவராலும் அழித்து விட முடியாது.
அரக்க வெறி கொண்டு எம்மையும்,எம் மக்களையும் கலை கலாச்சார விழுமியங்களையும்,படு கொலை செய்த குடும்பத்திற்கு கடந்த 8 ஆம் திகதி எமது மக்களே தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.
இத்தீர்ப்பின் மூலம் அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முல்லை மாவட்ட இளைஞர் அணியினரும்,வட கிழக்கு தமிழ் மக்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதனை ஞாபகப்படுத்திக்கொண்டு எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் என்பது மக்களாகிய எங்களினுடைய கருத்து.
தலைமை ஒன்றிற்கு கட்டுப்படாது மக்களும்,மக்கள் பிரதி நிதிகளும் எடுத்த முடிவினை ஒரு சில நச்சுப்பல்லிகள் எமது மக்களை குழப்புவதற்காக ஒலி எழுப்பினர்.ஆபத்தின்,மாற்றத்தின் தன்மை உணராத பாவிகள் அவர்கள்.
இவர்கள் மதில் மேல் உள்ள பூனைகளா?அல்லது கழுத்தில் சயனட் குப்பிகள் கட்டிய போராளிகள் போல் உடம்பில் தற்கொலை கவசம் அணிந்த தற்கொலையாளிகள் போலும் ஒரு சிலர் இன்று கொக்கரிக்கின்றனர்.
ஐயா,அம்மா நீங்கள் எங்களை ஏமாற்ற முடியாது.கடந்த காலங்களில் உலகமே வியக்கும் ஒரு சிறந்த நிர்வாக கட்டமைப்புக்குள் வாழ்ந்தவர்கள் நாங்கள்.நீங்கள் ஏதோ ஒரு சுயநலத்துக்காக மட்டும் எமது இனத்தையும்,எமது மக்களின் தியாகங்களையும் அடகு வைக்க எண்ணுகின்றீர்கள்.
உங்களின் நப்பாசை இன்று எமது இளைஞர்களாலும்,மக்களாலும் தவுடு பொடியாக்கப்பட்டுள்ளது.
எனினும் கட்சியின் ஒரு சிலர் தான் இன்றைய ஜனாதிபதியை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து கலந்துரையாடலிலும் இவர்கள் பங்கெடுத்தவர்கள்.தற்போது ஒரு சிலர் கட்சியினுள் புகுந்து கட்சியை குழப்ப முயற்சிக்கின்றனர்.
எது எவ்வாறாக இருப்பினும் மாவீரர்களையும்,போராட்டத்தையும் பணையமாக வைத்து எவரும் சுயநலம் பேண கடைசி வரை நாம் அனுமதிக்க மாட்டோம்.
இன்றைய அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் சென்று சர்வதேச அரசியல் நீரோட்டத்தில் ஒத்திசைந்து சென்று எமது தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பது தான் சிறந்த வழி என நாம் கருதுகின்றோம்.
\
நாம் அனைவரும் அரசியல் போராளிகளாக இணைந்து எமது மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முன்வர வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றோம்.
கடந்த காலங்களில் கட்சியின் கொள்கைகளை மீறி தலைமைகளுக்கு மதிப்பளிக்காது தலைமையின் தீர்மானங்களுக்கு எதிராக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்ட அனைத்து கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கும் குறித்த கட்சிகளின் தலைப்பீடம் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் அணி,மாவட்ட அக்கினி பறவைகள் அமைப்பும் கோரிக்கை விடுவதோடு அவர்களின் கருத்தை வண்மையாக கண்டிப்பதோடு உடனடியாக இவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவீரர்களையும்,போராட்டத்தையும் பணையமாக வைத்து எவரும் சுயநலம் பேண கடைசி வரை நாம் அனுமதிக்க மாட்டோம்-முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் அணி.-Photos
Reviewed by NEWMANNAR
on
January 24, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 24, 2015
Rating:




No comments:
Post a Comment