ஜனாதிபதியின் வெற்றிக்கான வாழ்த்தும் புதிய அரசுக்கான வேண்டுகையும்.நூர்முகமட் ஆலம்
இலங்கை ஜனநாயகசோசலிசடிகுடியரசின் 6 வது ஜனாதிபதியாக இலங்கை வாழ்மக்களினால் தெரிவாகிஉள்ளஅதிமேற்கு ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனஅவர்களின் வெற்றியில் இந்நாட்டின் குடிமகன் என்றரீதியிலும் வடமாகாணமீனவசமூகத்தின் தலைவர்என்றரீதியிலும் இணைத்துகொள்வதில் மட்டற்றமகிழ்ச்சி அடைகின்றேன்.
கடந்த காலங்களில் சிறுபான்மைசமூகம் சொல்லெண்ணாதுயரங்களைஅனுபவித்தது. அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் என்பனஅழிக்கப்பட்டதுடன் அவர்களின் வாழும் உரிமைதான் சார்ந்தசமயத்தைபின்பற்றும் உரிமைஎனப்பலஉரிமைகள் மறுக்கப்பட்டன இதற்கென பல உரிமைப் போராட்டங்களை இச்சமூகம் முன்னெடுத்தபோதும் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது கடந்த அரசு மேலும் இப் போராட்டங்களைமுன்னெடுப்பவர்களை புலி முத்திரைபதித்து இவர்களைசிறையில் அடைத்ததும் அல்லாமல் சிலபோராட்டங்களில் முன்நின்றவர்களின் உயிரையும் பறித்தனர். பலரை ஊனமாக்கினர்.
இதனையும் தாண்டி எமதுபோராட்டங்கள் தொடர்ந்தன. இதன் பயனாகநாம் சுதந்தரத்தின் சுவாசத்தை இன்று அனுபவிப்பவர்களாக உள்ளோம்.தற்போது இலங்கைவாழ் மக்கள் யாவரும் ஒரே நாடு ஒரு மக்கள் என்ற நிலையினை உருவாக்கி உள்ளது.
புதிய ஜனாதிபதியின் தெரிவுமுற்போக்குசிந்தனைகொண்டசிங்களமக்களும் சிறுபான்மைதமிழ்பேசும் மக்களும் மனித உரிமை அமைப்புக்களும் சிவில் சமூகமும் மற்றும் மாற்றத்தை விரும்பிய அனைவரின் பங்களிப்போடு பெறப்பட்டதாகும். இவ் வெற்றியினை ஒரு அரசியல் கட்சியோ அல்லது ஒரு சமூகமோ உரிமையாக்கிடமுடியாது.
எனவே இவ் மாற்றத்தின் ஊடாகசிறுபான்மைசமூகங்கள் தமது தொழில்களையும் சமயக் கடமைகளையும் அவர்களின் கலாச்சாரங்களையும் பின்பற்றி வாழ்வதற்கு ஜனாதிபதியின் கீழ் அமையும் அரசு துணைபுரியவேண்டும். மகிந்தவின் அரசியல் அதிகாரம் கொண்டுஅராஜகம் புரிந்த அமைச்சர்கள் மீளவும் அதேநிலையில் நடப்பதற்கு இவ் அரசுதுணைபோய்விடக்கூடாது.
என்பதே எமது வேண்டு கோளாகவும் உள்ளது. மேலும் வடக்குமக்களின் வாழ்க்கைதரம் கட்டியெழுப்பபடுவதுடன் அவர்கள் இழந்த வளங்களை பெற்றுக் கொடுப்பதுடன்.
இங்கு வாழும் மீனவர்களின் தொழில் முறைகளுக்குதடையாக உள்ள அந்நிய நாட்டுமீனவர்களின் அத்துமீறல் முற்றாகநிறுத்தநடவடிக்கைஎடுப்பதுடன் சிறுமீனவர்களின் தொழில் முறைகளை ஊக்குவிக்க தடைசெய்யப்பட் டதொழில் முறைகளை உடன் நிறுத்தி இத்தொழில் புரிபவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி அவர்களை மாற்றுதொழில் முறைக்குமாறச் செய்வதுடன் இடம் பெயர்ந்து வேறு இடங்களில் வாழும் குறிப்பாக மன்னாரில் முல்லிக்குளம் அதுபோன்றுநாட்டின் ஏனையாபகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் யாழ் வடமராட்சி மக்களைஅவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றி தென்பகுதியில் இருந்துவந்துதொழில் புரியும் மீனவர்களை கட்டுப்படுத்த இப்புதிய அரசு விரைந்து செயற்பட வேண்டும் எனகேட்டுக் கொள்வதுடன் புதிதாக பொறுப்பேற்றுள்ள மீன்பிடி அமைச்சருக்கும் மீனவசமூகம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
'மைத்திரியுகம் சிறுபான்மையினரின்யுகம்'
நூர்முகமட் ஆலம்
மன்னார்மாவட்டமீனவர் கூட்டுறவுச் சங்கங்களின்
சமாசம் மற்றும் வடமாகாணகடற்றொழில்
இணையத்தின் தலைவர்.
ஜனாதிபதியின் வெற்றிக்கான வாழ்த்தும் புதிய அரசுக்கான வேண்டுகையும்.நூர்முகமட் ஆலம்
Reviewed by NEWMANNAR
on
January 18, 2015
Rating:
.jpg)
No comments:
Post a Comment