அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்.
மன்னார் மூர்வீதியைச் சேர்ந்த சின்னப்பு நாயகம் டிலான் அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் 16-01-2015 அன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் கிளிநொச்சியை பிறப்பிடமாகவும்,மன்னார் மூர் வீதியை வதிவிடமாகாவும் கொண்டவர்.
கிளிநொச்சி கனிஸ்ட ம.வி பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும்,சாதாரண தரத்தை மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையிலும்,உயர் தரத்தை மன்/அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையிலும் கல்வி கற்று வந்தார்.
சூரியன் எப்.எம்.வானொலியின் சிரேஸ்ட அறிவிப்பாளராகவும்,உதவி நிகழ்ச்சி முகாமையாளராகவும் மன்னாரின் கல்விக்குரல் அமைப்பின் இயக்குனராகவும் இவர் கடமையாற்றி வருகின்றார்.
மன்னார் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாளராகவும் திகழ்ந்து வருகின்றார்.இவர் சின்னப்பு நாயகம் செபமாலை மேரி தம்பதிகளின் புதல்வன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்.
Reviewed by NEWMANNAR
on
January 18, 2015
Rating:

No comments:
Post a Comment