அண்மைய செய்திகள்

recent
-

வயலுக்குள் இறங்கிய பேரூந்து-Photos


காரைநகரிலிருந்து யாழ்நகர் நோக்கி பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து வட்டுக்கோட்டை பத்திரகாளி கோவிலுக்கு அருகாமையிலுள்ள வயலினுள் இறங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் காயங்களேதுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.

இன்று முற்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்துச்சம்பவம் பேருந்துச் சாரதியின் கவனமின்மையாலேயே இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.

வீதியில் போதிய இடமிருந்தும் எதிரே வந்துகொண்டிருந்த உழவு இயந்திரத்திற்கு இடம்விட்டுக் கொடுப்பதற்காக அதே வேகத்துடன் பேருந்தைக் கரைப்படுத்தியபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இடப்பக்க சக்கரங்கள் வயலில் முழுமையாக புதையுண்டதால் பேருந்து குடைசாய்வது தெய்வாதீனமாகத் தவிர்க்கப்பட்டது




வயலுக்குள் இறங்கிய பேரூந்து-Photos Reviewed by NEWMANNAR on January 02, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.