நிறைவேற்று அதிகாரங்களை வரையறுக்கும் சட்டமூலம் 21ம் திகதி சமர்ப்பிப்பு
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுக்கும் சட்டமூலமொன்று எதிர்வரும் 21ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
17ம் திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்தவும் 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவும் நாடாளுமன்றில் பிரேரணைகள் முன்வைக்கப்பட உள்ளன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்து நாடாளுமன்றிற்கு பொறுப்பு சொல்லக்கூடிய பிரதமர் ஆட்சி முறைமையை ஒன்று நிறுவப்பட உள்ளது.
சுயாதீன நீதிமன்ற ஆணைக்குழு, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு, சுயாதீன அரச சேவை ஆணைக்குழு, சுயாதீன லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு போன்றனவற்றை அமைக்கும் 17ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கொண்டு வரப்பட்ட 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்த அரசியல் அமைப்பு திருத்தம் எதிர்வரும் 21ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
தற்போதைய அரசியல் அமைப்பின் திருத்தங்கள் எதிர்வரும் 21ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரங்களை வரையறுக்கும் சட்டமூலம் 21ம் திகதி சமர்ப்பிப்பு
Reviewed by NEWMANNAR
on
January 18, 2015
Rating:

No comments:
Post a Comment