இலங்கையை மனித உரிமைக்கு மதிப்பளிக்கும் நாடாக காண்பதே எனது அபிப்பிராயம்; பாப்பரசர் (Photos and Video)
இலங்கையை மனித உரிமைக்கு மதிப்பளிக்கும் நாடாக காண்பதே எனது அபிப்பிராயம்; பாப்பரசர் (படங்கள் இணைப்பு)
இலங்கையை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் மத மற்றும் அரசியல் நல்லிணக்கம் உள்ள நாடாக காண்பதே தனது அபிப்பிராயம் பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த பாப்பரசர், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை,பாப்பரசர் பிரான்ஸிஸ் திருத்தந்தை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை தனிப்பட்ட முறையில் தமக்கும் நாட்டுக்கும் பாக்கியமான செயல் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரித்துள்ளார்.
இன்று காலை இலங்கையை சென்றடைந்த பாப்பரசரை வரவேற்ற பின்னர் இடம்பெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.
கொடிய யுத்தத்தின் பின்னர் நாடு சமாதானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் தமது அரசாங்கம் சமாதானத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்கிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தமது விஜயத்தின் போது பாப்பரசர் இலங்கையின் சமாதானத்துக்காக பிரார்த்திக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கை வந்த பரிசுத்த பாப்பரசரை கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வரவேற்பு நிகழ்வை அடுத்து பாப்பரசர் விசேட வாகனத்தில் கொழும்பு நோக்கி வருகை தருகிறார். பாப்பரசரின் ஆசியை பெறவென கொழும்பு – நீர்கொழும்பு வீதி ஓரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
January 14, 2015
Rating:

No comments:
Post a Comment