மன்னார் மடுவில் பாப்பரசர்-விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுத்தார்.2ம் இணைப்பு
இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ் இன்று(14) புதன் கிழமை மாலை 3.15 மணியளவில் விசேட வானூர்தி மூலம் மடு திருத்தலத்தை வந்தடைந்தார்.
இதன் போது சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாப்பரசரின் ஆசியை பெற வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்தனர்.
காலை 11 மணி முதல் மக்கள் காத்திருந்தனர்.இதன் போது காணாமல் போனவர்களது உறவினர்கள்,யுத்தத்தினால் பாதீக்கப்பட்டவர்கள்,அங்கங்களை இழந்தவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் என பலதரப்பட்டவர்களும் பாப்பரசரின் ஆசி பெற மடு திருத்தலத்திற்கு வருகை தந்திருந்தனர்.
மாலை 3.15 மணியளவில் விசேட வானூர்தி மூலம் மடு திருத்தலத்தை வந்தடைந்த பாப்பரசர் அங்கிருந்து மடு மாதா திருத்தலத்திற்கு வாகன பவனியாக அழைத்து வரப்பட்டார்.இதன் போது அங்கு நின்ற மக்களுக்கு ஆசி வழங்கினார்.
தொடர்ந்து பாப்பரசர் தலைமையில் மடு மாதா திருத்தலத்தில் விசேட திருப்பலி பூசை ஒப்புக் கொடுக்கப்பட்டு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.
பாப்பரசரை தரிசிப்பதற்காக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம்,சிவசக்தி ஆனந்தன்,வடமாகாண அமைச்சர்கள்,வடமாகாண சபை உறுப்பினர்கள்,அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Reviewed by NEWMANNAR
on
January 15, 2015
Rating:
No comments:
Post a Comment