சவூதியில் மரண தண்டனை விதித்த இலங்கையருக்கு மன்னிப்பு வழங்கவும் : ஜனாதிபதி கோரிக்கை
சவூதியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்குமாறு கோரி சவூதி அரசருக்கு ஜனாதிபதி கடிதமொன்றை அனுப்பவுள்ளார்.
யேமன் நாட்டு பிரஜையொருவரை தாக்கி அவர் மரணத்துக்கு காரணமாகவிருந்ததோடு கொள்ளையிலும் ஈடுபட்ட மூன்று இலங்கையர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரண தண்டனையை சவூதி அரேபிய நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் சவூதி அரேபியாவுக்குச் செல்லவுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குறித்த கடிதத்தை சவூதி அரசரை நேரடியாக சந்தித்து வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சவூதியில் மரண தண்டனை விதித்த இலங்கையருக்கு மன்னிப்பு வழங்கவும் : ஜனாதிபதி கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
February 22, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 22, 2015
Rating:


No comments:
Post a Comment