அண்மைய செய்திகள்

recent
-

கருணாவின் கண்ணில் பட்ட மன்னார் முள்ளிக்குளம்-பேரதிர்ச்சியில் மன்னார் மக்கள்.-Photos



மன்னார் மாவட்டத்தின் கடற்கரைகளிலே மிகவும் அழகானதும் கடல் வளம் அதிகம் கொண்டதுமான மன்னார் முள்ளிக்குளம் பிரதேச மக்கள் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இலங்கை கடற்படையினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இன்று வரை அகதி வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக பல தடவைகளிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் இவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக குரலெழுப்பி உள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் ஆயர் அவர்களும் அன்றைய பாதுகாப்பு செயலாளரான கோத்தபாயவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியும் உள்ளார்.

அதற்கு பாதுகாப்பு தரப்பும் அரச ஆதரவு தரப்பும் பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடிப்பு செய்து வந்தமை யாவரும் அறிந்ததே.

இது இவ்வாறு இருக்க கடந்த 18.02.2015 ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் முரனிதரனும் (கர்ணா) பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரும் வட கடலில் இந்திய மீனவர்களின் வருகையால் வடபகுதி மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கடல் வளம் அழிக்கப்படுகின்றது, முள்ளிக்குளம் கடல் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்று பாராளுமன்றத்தில் கூறி இருந்தமையை பத்திரிகையில் பார்த்த முள்ளிக்குளம் மக்களுக்கு பேர் அதிர்ச்சியாக இருந்ததாக அம் மக்கள் கூறியுள்ளனர்.

ஏனெனில் இவ்வளவு காலமும் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக இருந்தவர்கள் தற்போது இவ்வாறு கருத்து தெரிவிப்பதும் கடந்த காலங்களில் இந்திய மீனவர்களின் வருகையை கைகட்டி நின்று பார்த்தவர்களும் இவ்வாறு கூறுவது மிகவும் வேதனையளிக்கின்றது.

இதே போல் மகிந்த அரசில் தழிழ் மக்களுக்கு பல இடையூறுகளை விளைவித்தவர்களும் தமிழ் மக்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களித்தவர்களும் இப்போது உரிமைக்கு குரல் கொடுப்போம் உறவுக்கு கை கொடுப்போம் என்று கூறுவதும் மக்களுக்கு நன்று தெரியும் என்பதையும் விளங்கி கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து அதே மக்களின் சொத்துக்களை சூறையாடியவர்களுக்கும் எதிர்வரும் காலங்களில் மக்கள் நல்ல பாடம் புகட்ட உள்ளனர்.







கருணாவின் கண்ணில் பட்ட மன்னார் முள்ளிக்குளம்-பேரதிர்ச்சியில் மன்னார் மக்கள்.-Photos Reviewed by NEWMANNAR on February 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.