அண்மைய செய்திகள்

recent
-

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் சந்தேகத்திற்குரியது: விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு


சர்ச்சையை ஏற்படுத்திய திறமையான றகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜூதீனின் மரணம் இயற்கையாக நிகழ்ந்த விபத்தினால் ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்பதால், விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொலிஸ் மா அதிபர் மாற்றியுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி கார் ஒன்றில் வசீம் தாஜூதீன் இறந்து கிடந்தார். வாகன விபத்து காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என அப்போது ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில், இன்றைய ஊடக சந்திப்பில் இது குறித்து கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி வழங்கிய அறிக்கையில் காபன் மொனோக்சைட் றகர் வீரரின் உடலில் பெருமளவில் பரவிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரச இரசாயன பாகுப்பாய்வாளர் நீண்டகாலமாக தனது அறிக்கையை வழங்கவில்லை. கடந்த 12 ஆம் திகதி அந்த அறிக்கை வழங்கப்பட்டது. எனினும் நிலைமைகளின் அடிப்படையில் பரிசோதனை முடிவை வழங்க முடியாது என அதில் கூறப்பட்டுள்ளது எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

வசீம் தாஜூதீனின் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் சந்தேகத்திற்குரியது: விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு Reviewed by NEWMANNAR on February 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.