கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் சஷி வீரவங்ச விடுவிப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்ச கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து, சஷி வீரவனங்ச கடும் நிபந்தணைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
15 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
போலி கடவுச் சீட்டு தயாரித்த குற்றச்சாட்டில் கடந்த 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் சஷி வீரவங்ச கைது செய்யப்பட்டார்.
சஷி வீரவங்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி , நீதிமன்றத்தில் நேற்று நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த பத்திரத்தில் இந்த முறைப்பாடு தொடர்பில் இன்று விசாரணையை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
1967 ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி மற்றும் 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மூன்றாம் திகதி என இருவேறு பிறந்த தினங்களில், இரண்டு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இந்திக ஹேரத் இன்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் சஷி வீரவங்ச விடுவிப்பு
Reviewed by NEWMANNAR
on
February 27, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 27, 2015
Rating:


No comments:
Post a Comment