யாழில் உயர் பொலிஸ் அதிகாரி உட்பட இரண்டு அதிகாரிகள் கைது- யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் உள்ளிட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பிலான தகவல்களை மறைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலி
ஸ் அத்தியட்சகர் பதிரனலாகே விமலசேன மற்றும் அல்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ராஜகருணா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகவல்களை மறைத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று குறித்த இருவரையும் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சில காலங்களுக்கு முன்னர் பிரபல வர்த்தகர் ஒருவரின் படுகொலை தொடர்பிலான தகவல்களை இந்த அதிகாரிகள் இருவரும் மறைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரபல கோடீஸ்வர வர்த்தகரான பியகம விலேஜ் ஹோட்டல் உரிமையாளர் பேர்னாட் ஜயரட்ன வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்
யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வீரசிங்க பத்திரணலாகே விமலசேன, எல்பிட்டி பிராந்திய பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ராஜகருண ஆகியோரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பூகொட நீதவான் இந்திகா காலிங்கவங்ச இன்று உத்தரவிட்டுள்ளார்.
பியமக விலேஜ் உரிமையாளர் கொலை வழக்கு தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொலையுடன் சம்பந்தப்பட்டவர் எனக் காட்டுவதற்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கிளைமோர் குண்டு மற்றும் கைக்குண்டு என்பன மட்டக்களப்பு அதிரடிப்படை முகாமுக்குரியது எனவும் வீரசிங்க பத்திரணலாகே விமலசேன, அந்த முகாமில் அத்தியட்சகராக பணியாற்றியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை மறைத்து பொய் சாட்சியங்களை உருவாக்குவதற்காக வேறு ஒரு இளைஞரின் வீட்டுக்கு அருகில் இந்த வெடிப் பொருட்கள் புதைக்கப்பட்டுள்ளன.
அந்த இளைஞரை குற்றவாளியாக கட்டுவதற்காக பொலிஸ் அத்தியட்சகர், பியகம விலேஜ் உரிமையாளரின் மகனுக்கு பொலிஸ் அத்தியட்சகர் இந்த வெடிப்பொருட்களை கொடுத்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.
ஆபத்தான ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
யாழில் உயர் பொலிஸ் அதிகாரி உட்பட இரண்டு அதிகாரிகள் கைது- யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்
Reviewed by NEWMANNAR
on
February 27, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 27, 2015
Rating:


No comments:
Post a Comment