மாந்தை மேற்கு பிரதேச சபை நேர்மைத்தன்மையுடன் நடக்கவேண்டும் - மன்னார் உதைபந்தாட்ட லீக்
மன்னார் உதைபந்தாட்ட லீக்கினால் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான உதைபந்தாட்ட போட்டி ஒன்றை 2015 மாசி மாதம் 21ம் 22ம் திகதிகளில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் அடம்பன் மைதானத்தில் நடாத்த 2 வாரங்களுக்கு முன் பிரதேச சபை செயலாளரிடம் விண்ணப்பித்து அனுமதி பெறப்பட்டு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் முதல் நாளாகிய 20ம் திகதி அலுவலகத்தில் பணிபரியும் ஒரு அலுவலரினால் மாலை 3.00 மணியளவில் மைதானம் வழங்க வேண்டாம் எனவும் இதை தங்களுக்கு அறிவிக்கும்படியும் பிரதேச சபை தலைவர் தெரிவித்ததாகவும் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மைதானம் லீக்கிற்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை செயலாளரினால் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செயற்பாடானது ஒரு நிர்வாகத்தின் நிர்வாக குழறுபடியையும் அதே வேளை மாவட்ட சம்மேளனத்தை அவமதிப்பதையும் காட்டுகின்றது.
சகல கழகங்களுக்கும் போட்டி நிரலில் அடம்பன் மைதானம் என அறிவித்து சகல ஆயத்தங்களையும் மேற்கொண்டிருக்க முதல் நாள் மாலை தரமாட்டோம் என அறிவிப்பது வேடிக்கைக்குரிய விடயமாகவே கருதவேண்டியுள்ளது. அவ்வாறு தர விருப்பமில்லாது விட்டிருந்தால் நாம் விண்ணப்பித்தபோதெ தரமுடியாது என பதில் தெரிவித்திருக்க வேண்டும். இதில் ஏதோ ஒரு திட்டமிட்ட சதி காணப்படுகிறது.
இருந்தும் லீக் உதைபந்தாட்டத்தை வளர்ப்பதில் பின் நிற்காது என்பதை இவ்வாறானவர்களுக்கு புரிய வைக்க மன்னார் நகர சபையின் மைதானத்தை ஒரே நாளில் ஆயத்தம் செய்து திட்டமிட்டபடி போட்டியை சிறப்பாக நடாத்தி முடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேச சபையின் கண்மூடித்தனமான இச்செயற்பாட்டை மன்னார் உதைபந்தாட்ட லீக்கானது மிக வன்மையாக கண்டிப்பதுடன் இனி வருங்காலங்களில் நேர்மைத்தன்மையுடனும் உண்மைத்தன்மையுடனும் நடந்து கொள்ளவும் வேண்டிநிற்கிறது.
லீக் செயலாளர்
மாந்தை மேற்கு பிரதேச சபை நேர்மைத்தன்மையுடன் நடக்கவேண்டும் - மன்னார் உதைபந்தாட்ட லீக்
Reviewed by NEWMANNAR
on
February 24, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 24, 2015
Rating:
.jpg)

No comments:
Post a Comment