மன்னார் மாவட்டத்தில் அரச - தனியார் போக்குவரத்துச் சேவையை சீர் செய்ய நடவடிக்கை.-Photos
மன்னார் மாவட்டத்தில் போக்குவரத்துச் சேவையில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று புதன் கிழமை(25) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்றது.
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.குறித்த கலந்துரையாடலில் மன்னார் அரச போக்குவரத்துச் சேவை அதிகாரிகளுக்கும்,மன்னார் மாவட்ட மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்திற்கும் இடையில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கும் நோக்கிலும், ஒழுங்குகளை மேற்கொள்ளவும் நேர அட்டவணையை தயாரிப்பதற்குமாக விசேட குழு ஒன்றும் குறித்த கலந்துரையாடலில் நியமிக்கப்பட்டனர்.
இக்குழுவில் தனியார் போக்குவரத்துச் சங்கம் சார்பாக மூன்று பேரும் இலங்கை போக்குவரத்து சபை சார்பாக மூன்று பேரும், பிரதம கணக்காளர், தேசிய போக்குவரத்து சபையின் வட மாகாண இணைப்பாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் அடங்குகின்றனர்.
இவர்கள் தயாரிக்கும் நேர அட்டவணை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டு அரசாங்க அதிபரால் நடைமுறைபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடல் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், மன்னார் அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய ,பிரதம கணக்காளர் கமலேந்திரன், மற்றும் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் அரச - தனியார் போக்குவரத்துச் சேவையை சீர் செய்ய நடவடிக்கை.-Photos
Reviewed by NEWMANNAR
on
February 26, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 26, 2015
Rating:





No comments:
Post a Comment